Latest Lyrics Here!
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சுஎன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த க என்ன நெனச்ச நீ என்ன நெனச்சஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோதுஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்சஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோதுபெண்:-சொக்கி தவிச்சேன் மீனம்மா மீனம்மாகண்கள் மீனம்மா தேனம்மாதேனம்மா நாணம் ஏனம்மாசுகமான புது ராகம் உருவாகும்வேளை நாணமோ இதமாக சுகம்காண துணை வேண்டாமோ ஓஓபெண் : மீனம்மா மீனம்மாகண ஏன்.. இதயம்உடைத்தாய் நொறுங்கவேஎன் மறு இதயம் தருவேன்நீ உடைக்கவேபெண் : ஹோ ஹோசன்னாஹோசன்னா ஓஓ ஹோஹோசன்னா ஹோசன்னாஓஓஆண் : அந்த நேரம் அந்திநேரம் கண் பார்த்து கடலினில் மீனாக இருந்தவள் நான்உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்துடித்திருந்தேன் தரையினிலேதிரும்பிவிட்டேன் கடலிடமேஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உன தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல் தல் காதல்...தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல் தல் காதல்ஆஹா..தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல தேடும் கண் பார்வை தவிக்க துடிக்கதேடும் கண் பார்வை தவிக்க துடிக்கசொன்ன வார்த்தை காற்றில் போனதோவெறும் மாயமானதோ...தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்தேடும் ஊரு சனம் தூங்கிருச்சு  ஊதக் காத்தும் அடிச்சிருச்சுபாவி மனம் தூங்கலையே  அதுவும் ஏனோ புரியல்லையே .ஊரு சனம் தூங்கிருச்சு &n குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளுஉண்மைகள் சொன்னேன்கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளுஉண்மைகள் சொன்னேன்சுருதியோடு நயம குருவாயூரப்பா குருவாயூரப்பாகுருவாயூரப்பா குருவாயூரப்பாநான் கொண்ட காதலுக்குநீதானே சாட்சிகுருவாயூரப்பா குருவாயூரப்பாவேண்டாத தெய்வமில்லை நீதானே பாக் மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், கள்ளிக்காட்டில்  பிறந்த   தாயேஎன்(னை)ன  கல்லோடச்சு    வளத்த    நீயேமுள்ளுக்காட்டில்  முளைச்ச  தாயேஎன கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேள பூவான ஏட்டத் தொட்டுபொன்னான எழுத்தாலேகண்ணான கண்ணுக்கொருகடிதாசி போட்டேனேஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சிஏந்திக் கொள்ளம்மாஎன்ன தாங்கிக் கொள்ளம்மாஏடாக மஞ்சப்பொடி தேய்க்கையிலேஎன் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ளமஞ்சப்பொடி தேய்க்கையிலேஎன் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ளதண்ணி தொட்ட. பாகம் எல்லாம கீரவாணிஇரவிலே கனவிலே பாட வா நீஇதயமே உருகுதே....அடி ஏனடி சோதனைதினம் வாலிப வேதனைதனிமையில் என் கதி என்னடிசங்கதி சொல்லடி வாணி கீரவாணிஇரவிலே கனவிலே பாட வா அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி..... சந் விழிகளில் ஒரு வானவில்இமைகளை தொட்டு பேசுதேஇது என்ன புது வானிலைமழை வெயில் தரும்உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...என் தாய்முகம் அன்பே...உன்னிடம் த ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில...ஏய் தாமர பூத்திருச்சேமாமா தாவணி வாங்கிவாங்க...ஊரெல்லாம் கூட்டிகிட்டு...வந்திடுங்க மேளம் கொட்டி... செங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவிசெங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்கு அடி நான் புடிச்ச கிளியேவாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடிநீ கூடு விட்டு வெளியேவந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடிஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன் இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணிஇன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணிஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணிஅது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணிஎன்ன ஆனாலும் எண்ண இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங என்னதான் சுகமோ நெஞ்சிலேஇதுதான் வளரும் அன்பிலேராகங்கள் நீ பாடி வாபண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும்காதல் ♥️  உறவேஎன்னதான் ச
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சுஎன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த க
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு 

கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே 
குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமே 
மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க 

எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு 
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும் 
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு 
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும் 
கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே 
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே 
பத்து விரல் போதாது உன் மோகமே 
லட்ச விரல் நீ கொண்டு வா வானமே 
என் முத்து மணி சுடர் முல்லை மலர் திடல் 
நாணுவதேன் 

முக்கனி அதில் முக்கியம் கொண்ட 
முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன் 
பத்தினி பெண்ணின் பத்தியம் தேட 
ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்
பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது 
என்றும் இனி நீங்காது நான் சேர்ந்தது 
தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது 
என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது 
ஒன் வெள்ளை மனசிலும் வெட்க சிரிப்பிலும் 
வாழ்ந்திருப்பேன் 
 
என்ன நெனச்ச நீ என்ன நெனச்சஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோதுஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்சஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோதுபெண்:-சொக்கி தவிச்சேன்
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது

பெண்:-சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் (2)
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

ஆண்:-நான் தர சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்:தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்:உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச

பெண்:என் நெஞ்சுக்குழி மீதும் ஒண்ணு கேக்க நெனச்சேன்

ஆண்:ஏன் பேராச நூறாச கேக்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

பெண்:ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

ஆண்:மெத்தைக்கு மேல உன்னோட சேல
என்கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச

பெண்: எப்போதும் போல உன்னோட வேலை
ஆரம்பமாசுதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்:உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்:நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்

ஆண்:நாம் உன்னோடு ஒண்ணாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

பெண்:கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு
கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்
என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

ஆண்:சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் (2)
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்...
 
மீனம்மா மீனம்மாகண்கள் மீனம்மா தேனம்மாதேனம்மா நாணம் ஏனம்மாசுகமான புது ராகம் உருவாகும்வேளை நாணமோ இதமாக சுகம்காண துணை வேண்டாமோ ஓஓபெண் : மீனம்மா மீனம்மாகண
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
வேளை நாணமோ இதமாக சுகம்
காண துணை வேண்டாமோ ஓஓ

பெண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நெஞ்சம் தேனம்மா

பெண் : சிங்கம் ஒன்று நேரில்
வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே

ஆண் : முத்தை அள்ளி
வீசி இங்கு வித்தை
செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி

பெண் : மோகம் கொண்ட
மன்மதனும் பூக்கணைகள்
போடவே காயம் பட்ட காளை
நெஞ்சும் காமன் கணை மூடுதே

ஆண் : மந்திரங்கள் காதில்
சொல்லும் இந்திரனின்
ஜாலமோ சந்திரர்கள்
சூரியர்கள் போவதென்ன
மாயமோ

பெண் : இதமாக சுகம்
காண துணை நீயும் இங்கு
வேண்டுமே சுகமான புது
ராகம் இனி கேட்கத்தான்….

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : ஆஹா தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா

குழு : ………………….

ஆண் : இட்ட அடி நோகுமம்மா
பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
போடுங்கள்

பெண் : சங்கத்தமிழ் காளை
இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
கட்டி லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில்
நான் இணைய வாழ்த்துங்கள்

பெண் : பள்ளியறை நேரமிது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை
பூங்கதவை மூடுங்கள்

ஆண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேலை நாணமோ
பெண் : இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ….ஓஹோ

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா

பெண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணுமே
இதமாக சுகம் காண துணை
வேண்டாமோ ஓஓ

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா.,.,.,.,.,.,.
 
ஏன்.. இதயம்உடைத்தாய் நொறுங்கவேஎன் மறு இதயம் தருவேன்நீ உடைக்கவேபெண் : ஹோ ஹோசன்னாஹோசன்னா ஓஓ ஹோஹோசன்னா ஹோசன்னாஓஓஆண் : அந்த நேரம் அந்திநேரம் கண் பார்த்து
ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே

பெண் : ஹோ ஹோசன்னா
ஹோசன்னா ஓஓ ஹோ
ஹோசன்னா ஹோசன்னா
ஓஓ

ஆண் : அந்த நேரம் அந்தி
நேரம் கண் பார்த்து கந்தலாகி
போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
ஹோசன்னா என் வாசல்
தாண்டி போனாளே ஹோசன்னா
வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு
நூறாகிறேன் அவள் போன
பின்பு எந்தன் நெஞ்சை தேடி
போகிறேன்

பெண் : ஹோசன்னா
ஆண் : வாழ்வுக்கும்
பக்கம் வந்தேன்
பெண் : ஹோசன்னா
சாவுக்கும் பக்கம்
நின்றேன்
பெண் : ஹோசன்னா
ஏனென்றால் காதல்
என்பேன்
பெண் : ஹோசன்னா

Male : Everybody wanna know be like be like
I really wanna be here with you..
Is that enough to say that
We are made for each other is all that is Hosaana true

Hosaanna… be there when you are calling i will be there..
Hosaanna… be the life the whole life i share..
I never wanna be the same..
Its time we re arrange i take a step
You take a step and me calling out to you…

ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ
ஹோசன்னா

பெண் : ஹோ ஹோசன்னா
ஹோ ஹோ ஹோ ஹோசன்னா
ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ
ஹோஹோஹோ ஹோஹோ
ஹோஹோஹோஹோ

ஆண் : வண்ண வண்ண
பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம்
ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசன்னா மேகம் உன்னை
தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன்
நான் குழந்தை ஆகிறேன் நான்
உன்னை அள்ளி கையில் வைத்து
பொத்தி கொள்கிறேன்

ஆண் : ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ ஹோசன்னா
பெண் : ஹோசன்னா
ஆண் : என் மீது அன்பு
கொள்ள
பெண் : ஹோசன்னா
ஆண் : என்னோடு
சேர்ந்து செல்ல
பெண் : ஹோசன்னா
ஆண் : ஹம்ம் என்று
சொல்லும் போதும்
பெண் : ஹோ ஹோசன்னா

ஆண் : { ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே } (2)
 
கடலினில் மீனாக இருந்தவள் நான்உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்துடித்திருந்தேன் தரையினிலேதிரும்பிவிட்டேன் கடலிடமேஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உன
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா


கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்.....

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல்நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்.....

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
 
தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல் தல் காதல்...தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல் தல் காதல்ஆஹா..தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்...

தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா..தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல்  ஒரு ஊஞ்சல்
ஹா..ஜில் ஜில்  இள நெஞ்சில்
ஜல் ஜல்  ஒரு ஊஞ்சல்

ஆடல்..பாடல்..கூடல்

தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கம் ஏனடி பூங்குயிலே
தவிக்கிறேன் அடி நான் கூட

விளக்கு வைத்தால் 
துடித்திருப்பேன்
படுக்கையில் நான் 
புரண்டிருப்பேன்

கைகள் படாத இடம்தான் 
இப்போது
ஆசை விடாத சுகம்தான் 
அப்போது

ஏக்கம்..ஏதோ..கேட்கும்

ம்ம்..தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில்  இள நெஞ்சில்
ஜல் ஜல்  ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில்  இள நெஞ்சில்
ஜல் ஜல்  ஒரு ஊஞ்சல்

ஆடல்..பாடல்..கூடல்

ஹா..தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்

அடுத்த கட்டம்
நடப்பதெப்போ
எனக்கு உன்னை 
கொடுப்பதெப்போ

மாலை இடாமல் 
வசந்தம் வராது
வேளை வராமல்
பெண் உன்னைத் தொடாது

போதும்..போதும்..ஊடல்

ஹா..தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா..தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில்  இள நெஞ்சில்
ஜல் ஜல்  ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில்  இள நெஞ்சில்
ஜல் ஜல்  ஒரு ஊஞ்சல்

ஆடல்..பாடல்..கூடல்
 
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்கதேடும் கண் பார்வை தவிக்க துடிக்கசொன்ன வார்த்தை காற்றில் போனதோவெறும் மாயமானதோ...தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்தேடும்
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு.....

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க......

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா.........




தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்..............




தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க.......
 
ஊரு சனம் தூங்கிருச்சு  ஊதக் காத்தும் அடிச்சிருச்சுபாவி மனம் தூங்கலையே  அதுவும் ஏனோ புரியல்லையே .ஊரு சனம் தூங்கிருச்சு &n
ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 
.
ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 


ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 

.
குயிலு கருங்குயிலு  
மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே......
மயிலு இளம் மயிலு 
மாமன் கரிக் குயிலு  
ராகம் பாடும் கேட்டாலே  .......
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே  உள்ளம் 
வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே  
என் மாமனே ......என் மாமனே

ஒத்தையிலே அத்த மக  
ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே  
காலம் நேரம் கூடலையே 

ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே 

மாமன் ஒதடு பட்டு  
நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா........
நாளும் தவமிருந்து  
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா

நிலா காயும் நேரம்  
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் - இந்த  
நேரந்தான் இந்த நேரந்தான

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்  
ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்  
என்ன மேலும் ஏங்க வச்சான்



ஊரு சனம் தூங்கிருச்சு  
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே  
அதுவும் ஏனோ புரியல்லையே
 
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ மலக்காத்து வீசுற போது மல்லிகப்பூ பாடாதா மழை மேகம் கூடுற போது வண்ண மயில் ஆடாதா மலக்காத்து வீசுற போது மல்லிகப்பூ பாடாதா மழை மேகம் கூடுற போது வண்ண மயில் ஆடாதா எம் மேனி தேனரும்பு எம்பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்னத்தான் கட்டி வைப்பேன் சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா... கண்ணா உன் வாலிப நெஞ்ச எம் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா கண்ணா உன் வாலிப நெஞ்ச எம் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான் இராவானா வேதனதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
 
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளுஉண்மைகள் சொன்னேன்கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளுஉண்மைகள் சொன்னேன்சுருதியோடு நயம
கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

சுருதியோடு நயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

வாலிபங்கள் ஓடும்
வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடி போட்ட பந்தம் 
பிரிவென்னும் சொல்லே
அறியாதது

அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில
சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை
பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

கூவுகின்ற குயிலை
கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால்
பாடாதம்மா
சோலை மயில்தன்னை
சிறை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம்
பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போலே
பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

கல்யாண மாலை 
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்.
 
குருவாயூரப்பா குருவாயூரப்பாகுருவாயூரப்பா குருவாயூரப்பாநான் கொண்ட காதலுக்குநீதானே சாட்சிகுருவாயூரப்பா குருவாயூரப்பாவேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்
குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை 
நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன 
வேதமென்ன
நான் போகும் பாதை 
எந்நாளும் உன் பாதை - 2

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு 
நீதானே சாட்சி

தேனாற்றங்கரையில் 
தெய்வீகக்குரலில் 
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

தினந்தோறும் இரவில் 
நடு ஜாமம் வரையில் 
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

அரங்கேற்றந்தான் 
ஆகாமல்தான் 
அலைபாயும் என் ஜீவன்தான்

வா வா என் தேவா 
செம்பூவாய் என் தேகம் 
சேராதோ உன் கைகளிலே
குருவாயூரப்பா.....


ஏகாந்த நினைவும் 
எரிகின்ற நிலவும் 
என் மேல் ஒரு போர் தொடுக்க

எனை வந்துத் தழுவு 
ஏன் இந்தப் பிரிவு 
மானே வா உனை யார் தடுக்க

பரிமாறலாம் 
பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

மாது உன் மீது 
இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே
குருவாயூரப்பா .....

குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை 
நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன 
வேதமென்ன
நான் போகும் பாதை 
எந்நாளும் உன் பாதை

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு 
நீதானே சாட்சி
 
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன்,
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 

நான் எத்தனையும் பொத்தி வச்சேன், 
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு, 
அது அத்தனையும் மொத்தத்துல 
இரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சி, 
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 

நெஞ்சுக்குள்ள நேசம் எனும் 
நாத்து நட்டேன் நேத்து., 
நட்டதெல்லாம் நெல்மணியா நிற்குதடி பூத்து.., 
வச்சிப் பொண்ணு தாவணிய தூக்குதய்யா காத்து., 
ஒத்திபோக சொல்லுமுன்னே 
சொக்கிபோற பாத்து.., 

நான் என்ன செய்ய, 
வம்பு பண்ணுது என் மனது.., 
நாணம் இல்லாம சும்மா நிக்குமா பெண் மனது..?, 
வெட்கம் நீங்கிடுமா..?, 
இன்னும் நாடகமா..?, மானே., 

இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 
என் மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 


பத்தமடா பாய்விரிச்சு நான் படுத்தா போச்சு, 
பத்தவச்ச சூடப் போல சூடாகுதே மூச்சு, 
வெண்ணிலவை தூதுவிட்டு 
சேதி சொல்லு நாளும், 
வேலையெல்லாம் விட்டுப்புட்டு ஓடி வரேன் நானும்.., 
நீ வரவேண்டி உயிர் நித்தமும் தத்தளிக்கும்., 
ஆயிரம் வாட்டி மனம் உன் பெயர் உச்சரிக்கும்.., 
இராப்பகலாக என்ன வேதனை பண்ணுறியே.., 
பூப்படஞ்சாலே தூக்கம் 
போயிடும் கண்மணியே, 
இன்னும் ஏங்கனுமா..?, 
மனம் தாங்கிடுமா..?, மாமா., 

என் மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 
என் மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 
நான் எத்தனையும் பொத்தி வச்சேன், 
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு, 
அது அத்தனையும் மொத்தத்துல 
இரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சி, 

மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன்,
 
கள்ளிக்காட்டில்  பிறந்த   தாயேஎன்(னை)ன  கல்லோடச்சு    வளத்த    நீயேமுள்ளுக்காட்டில்  முளைச்ச  தாயேஎன
கள்ளிக்காட்டில்  பிறந்த   தாயே
என்(னை)ன  கல்லோடச்சு    வளத்த    நீயே
முள்ளுக்காட்டில்  முளைச்ச  தாயே
என்ன  முள்ளு  தைக்க  விடல  நீயே

காடைக்கும்  காட்டு  குருவிக்கும்
எந்த  புதரிலும்  இடமுண்டு….
கோடைக்கும்  அடிக்கும்  குளிருக்கும்
தாயி  ஒதுங்கத்தான்  இடமுண்டா
கரட்டு  மேட்டையே  மாத்துனா
அவ  கல்லபுழிஞ்சு   கஞ்சி  ஊத்துனா.

(கள்ளிக்காட்டில்)

ஒழவு  காட்டுல   வெத  வெதப்பா
ஓணான்கரட்டுல   கூழ்  குடிப்பா
ஆவாரங்  -குலையில  கை  துடைப்பா
பாவமப்பா  …..

வேலி  முள்ளில்  அவ  வெறகெடுப்பா
நாழி  அரிசி  வச்சு  ஓலையரிப்பா
புள்ள  உண்ட  மிச்சம்  உண்டு  உசுர்  வளப்பா
தியாகமப்பா  …

கிழக்கு  விடியும்  முன்ன  முழிக்குறா
அவ  ஒலக்க  பிடிச்சுதான்  தெறக்குரா
மண்ண  கிண்டித்தான்  பொழைக்கிறா
உடல்  மக்கிபோக  மட்டும்  ஒழைக்குறா
(கள்ளிக்காட்டில்)...



தங்கம்  தனித்  தங்கம்  மாசு -இல்ல
தாய்ப்பால்  ஒண்ணில்  மட்டும்  தூசு  இல்ல
தாய்வழி  சொந்தம்  போல  பாசமில்ல
நேசமில்ல  …

தாயி  கையில் என்ன மந்திரமா?
கேப்பக்களியில் ஒரு நெய் ஒழுகும்
காய்ஞ்ச கருவாடு தேனொழுகும்
அவ சமைக்கையில...

சொந்தம்  நூறு  சொந்தம்  இருக்குது
பெத்த  தாயி  போல  ஒண்ணு  நெலைக்குதா
சாமி  நூறு  சாமி  இருக்குது அட
தாயி  ரெண்டு  தாய்  இருக்குதா
(கள்ளிக்காட்டில் )...
 
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேள
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி எந்நாளும்தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல் தான் இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
 
பூவான ஏட்டத் தொட்டுபொன்னான எழுத்தாலேகண்ணான கண்ணுக்கொருகடிதாசி போட்டேனேஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சிஏந்திக் கொள்ளம்மாஎன்ன தாங்கிக் கொள்ளம்மாஏடாக
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா

ஏடாக என்னத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருப்பேன்
எண்ணத்தில் நீ இருந்தா
எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்

நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு
பூவென நெஞ்சு பூத்ததையா
பூத்தது என்ன பாத்தது என்ன
கேட்டது தானா கிடைச்சதம்மா

அன்பாக என்னக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
அள்ளித் தான் சேர்த்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும்
ஆசைய நான்தான் 
மறச்சி வைச்சேன்

பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா

பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா
பொன்னான ஒம்மனச
எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துக் கிட்டேன்

வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்
தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்
பூவுக்கு வேலியிட்டா
வாசம் எங்கு போகும்
பூ அள்ளி நீ கொடுத்தா
பொண்ணு ஒன்னச் சேரும்
கேட்டத எல்லாம் நான் தரவா

பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட
கடிதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சி உன் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா
என்னத் தாங்கிக் கொள்ளையா

பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்னத் தாங்கிக் கொள்ளம்மா
 
மஞ்சப்பொடி தேய்க்கையிலேஎன் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ளமஞ்சப்பொடி தேய்க்கையிலேஎன் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ளதண்ணி தொட்ட. பாகம் எல்லாம
மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள
மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள

தண்ணி தொட்ட. 
பாகம் எல்லாம்
இந்த கண்ணன் தொடும்
காலம் எப்போ
கண்ணனுக்கு நல்ல பதில்
சொல்லு புள்ள

மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள

குத்தாலச் சாரலுக்கு 
யோகமடி
குண்டுமல்லி பூவுக்கொரு
நேரமடி
விட்டாக்கா ஏறுதொரு 
பாரமடி
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு
தீருமடி

ஒன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி

ஒன்னாச்சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானா தீரும்

மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள

மொட்டான மொட்டு ஒன்னு
பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து
சேர்ந்ததென்ன
தேனாறு உன் உதடு
வந்ததென்ன
தேன் எடுத்து நான் அருந்த 
நேரம் என்ன

ஒன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாக தூவும் போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு

கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்

மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள
மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள

தண்ணி தொட்ட. 
பாகம் எல்லாம்
இந்த கண்ணன் தொடும்
காலம் எப்போ
கண்ணனுக்கு நல்ல பதில்
சொல்லு புள்ள

மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள
மஞ்சப்பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு 
தேய்ச்ச புள்ள

 
கீரவாணிஇரவிலே கனவிலே பாட வா நீஇதயமே உருகுதே....அடி ஏனடி சோதனைதினம் வாலிப வேதனைதனிமையில் என் கதி என்னடிசங்கதி சொல்லடி வாணி கீரவாணிஇரவிலே கனவிலே பாட வா
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே....
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே.....


ஆண் : க ரி ஸ ப ம க...பா நி
ச ரி க ரி க ஸ...நீ பா

ஆண் : ஆ..ஆ..ஆ..ஆ..

ஆண் : நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி

பெண் : தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
ஒரு வாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ....
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே...


ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண் : இந்த வனமெங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

ஆண் : அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே....


 
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி..... சந்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு 
தகரம் இப்போ தங்கம் ஆச்சு 
காட்டு மூங்கில் பாட்டு பாடும் 
புல்லாங்குழல் ஆச்சு 
சங்கீதமே சந்நிதி..... 
சந்தோசம் சொல்லும் சங்கதி..... 

கார்காலம் வந்தால் என்ன 
கடுங்கோடை வந்தால் என்ன 
மழைவெள்ளம் போகும்...... 
கரைரெண்டும் வாழும் 
காலங்கள் போனால் என்ன.... 
கோலங்கள் போனால் என்ன 
பொய் அன்பு போகும்..... 
மெய் அன்பு வாழும் 
அன்புக்கு உருவம் இல்லை 
பாசத்தில் பருவம் இல்ல 
வானோடு முடிவும் இல்லை 
வாழ்வோடு விடையும் இல்லை 
இன்றென்பது உண்மையே.... 
நம்பிக்கை உங்கள் கையிலே....... 


தண்ணீரில் மீன்கள் வாழும் 
கண்ணீரில் காதல் வாழும் 
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே 
பசியாற பார்வை போதும் 
பரிமாற வார்த்தை போதும் 
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் 
தலைசாய்க்க இடமா இல்லை 
தலை கோத விரலா இல்லை 
இளங்காற்று வரவா இல்லை 
இளைப்பாறு பரவாயில்லை 
நம்பிக்கையே நல்லது...... 
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது....


 
விழிகளில் ஒரு வானவில்இமைகளை தொட்டு பேசுதேஇது என்ன புது வானிலைமழை வெயில் தரும்உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...என் தாய்முகம் அன்பே...உன்னிடம் த
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...
என் தாய்முகம் அன்பே...
உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...
என்னாகுமோ இங்கே...
முதன் முதலாய் மயங்குகிறேன்...
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா...

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
யார் இவன்... யார் இவன்...
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேன்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி
 
ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில...ஏய் தாமர பூத்திருச்சேமாமா தாவணி வாங்கிவாங்க...ஊரெல்லாம் கூட்டிகிட்டு...வந்திடுங்க மேளம் கொட்டி...
ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்...

ஆண்: கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில, மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

பெண்: உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கத் த்ரி ஆச்சி...
ஒளிவா, மறவா, பேசி சிரிக்க
ஓட கடயாட்சி...

ஆண்: கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு...

பெண்: ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு...

ஆண்: உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து சொருவ...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...

ஆண்: ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வான்கிவாறேன்...

பெண்: தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி...
ஆத்தி பூத்த மாலை போல
மாமா உன் பேச்சு...

ஆண்: கண்ணே உனக்கு, மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

பெண்: மாமன் தரனும் சீரு,
ரெண்டு மாங்கா தட்டு சோறு...

ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கூறு...

பெண்: வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...


ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே


புள்ள தாவணி வாங்கிவாறேன்...
 
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவிசெங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்கு
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருஹிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
 
அடி நான் புடிச்ச கிளியேவாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடிநீ கூடு விட்டு வெளியேவந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடிஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன்
அடி நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி

கட்டு கட்டா புத்தகத்த சுமக்க வில்ல நானடி
ஆனாலும் தான் கேட்ட வழி போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

[நான் புடிச்ச கிளியே …]

ஊருக்குள்ளே நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிச கேட்கவில்ல நானடி
ஆசை பட்ட பாவத்துக்கு அள்ளி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி மாமன் தொள சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
உன்ன கண் போலதான் வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

[நான் புடிச்ச கிளியே …]
 
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணிஇன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணிஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணிஅது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணிஎன்ன ஆனாலும் எண்ண
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாடாதே
உன்ன அனசாலும் நெனச்சாலும்
சுகம் தனம்மா
இது நீ இருக்கும் ….

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

அங்கே ஓடி வரும் என் குரலே
நெஞ்சே கூறி விடும் உன்னிடமே
என் கை என் உடம்பை காயம் செய்தால்
என்கே கூறிடுவேன் என் உயிரே

நீ எந்தன் பாதி இது தானே நீதி
உன்னை விட்டு போக முடியாதம்மா
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மணி
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மணி
இது நீ இருக்கு,….

 
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்
இங்கே என்னிடத்தில் கோபமும் ஏன்
சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்
மேகங்கள் மூடும் கருவானம் கூட

காற்றங்கு வந்தால் தெளிவாகுமே
பதில் தேவையா உயிர் தேவையா
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மணி
ஒரு ராகம் சொல்லி தேடுங்கின்றேன் கண்மணி
இது நீ இருக்கும்..

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாடாதே
உன்ன அனசாலும் நெனச்சாலும்
சுகம் தனம்மா
இது நீ இருக்கும் ….
 

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
 
இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங
இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காதே.....ஓ....ஓ இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அன்னாளில் நீ தான் சொன்னது கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது என் போன்ற ஏழை முடிவிழும் வாழை உண்டானக் காயம் ஆறக்கூடுமா காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன் இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ.... கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் உன்னோடு வாழ இல்லையொரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய் பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காது ஆ.........ஆ...........
 
என்னதான் சுகமோ நெஞ்சிலேஇதுதான் வளரும் அன்பிலேராகங்கள் நீ பாடி வாபண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும்காதல் ♥️  உறவேஎன்னதான் ச
என்னதான் சுகமோ 
நெஞ்சிலே
இதுதான் வளரும் 
அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும் 
மோகங்கள் நீ காணவா 
எந்நாளும்
காதல் ♥️  உறவே

என்னதான் சுகமோ
நெஞ்சிலே 
இதுதான் வளரும் 
அன்பிலே

பூவோடு வண்டு
புது மோகம் கொண்டு
சொல்கின்ற 
வண்ணங்கள் 
நீ சொல்லத்தான்

நான் சொல்லும் போது 
இரு கண்கள் மூடி 
எழுதாத எண்ணங்கள்
நீ சொல்லத்தான்

இன்பம் வாழும் 
உந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் 
காதல் ராணி 

சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் 
நேரம் இது 
காதல்  உறவே

என்னதான் சுகமோ
நெஞ்சிலே 
இதுதான் வளரும் 
அன்பிலே

தீராத மோகம் 
நான் கொண்ட நேரம் 
தேனாக நீ வந்து
சீராட்டத்தான்

காணாத வாழ்வு
நீ தந்த வேளை 
பூமாலை நான் சூடி 
பாராட்டத்தான் 

நீ என் ராணி 
நான் தான் தேனீ
நீ என் ராஜா 
நான் உன் ரோஜா 

தெய்வீக பந்தத்திலே 
நான் கண்ட 
சொர்க்கம் இது 
காதல்  உறவே

என்னதான் 
சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் 
அன்பிலே   

ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும் 
மோகங்கள் நீ காணவா 
எந்நாளும்
காதல் ♥️  உறவே

என்னதான் சுகமோ
நெஞ்சிலே 
இதுதான் வளரும் 
அன்பிலே