மீனம்மா மீனம்மாகண்கள் மீனம்மா தேனம்மாதேனம்மா நாணம் ஏனம்மாசுகமான புது ராகம் உருவாகும்வேளை நாணமோ இதமாக சுகம்காண துணை வேண்டாமோ ஓஓபெண் : மீனம்மா மீனம்மாகண
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
வேளை நாணமோ இதமாக சுகம்
காண துணை வேண்டாமோ ஓஓ

பெண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நெஞ்சம் தேனம்மா

பெண் : சிங்கம் ஒன்று நேரில்
வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே

ஆண் : முத்தை அள்ளி
வீசி இங்கு வித்தை
செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி

பெண் : மோகம் கொண்ட
மன்மதனும் பூக்கணைகள்
போடவே காயம் பட்ட காளை
நெஞ்சும் காமன் கணை மூடுதே

ஆண் : மந்திரங்கள் காதில்
சொல்லும் இந்திரனின்
ஜாலமோ சந்திரர்கள்
சூரியர்கள் போவதென்ன
மாயமோ

பெண் : இதமாக சுகம்
காண துணை நீயும் இங்கு
வேண்டுமே சுகமான புது
ராகம் இனி கேட்கத்தான்….

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : ஆஹா தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா

குழு : ………………….

ஆண் : இட்ட அடி நோகுமம்மா
பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
போடுங்கள்

பெண் : சங்கத்தமிழ் காளை
இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
கட்டி லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில்
நான் இணைய வாழ்த்துங்கள்

பெண் : பள்ளியறை நேரமிது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை
பூங்கதவை மூடுங்கள்

ஆண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேலை நாணமோ
பெண் : இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ….ஓஹோ

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா

பெண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணுமே
இதமாக சுகம் காண துணை
வேண்டாமோ ஓஓ

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா.,.,.,.,.,.,.