பூவான ஏட்டத் தொட்டுபொன்னான எழுத்தாலேகண்ணான கண்ணுக்கொருகடிதாசி போட்டேனேஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சிஏந்திக் கொள்ளம்மாஎன்ன தாங்கிக் கொள்ளம்மாஏடாக
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா

ஏடாக என்னத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருப்பேன்
எண்ணத்தில் நீ இருந்தா
எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்

நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு
பூவென நெஞ்சு பூத்ததையா
பூத்தது என்ன பாத்தது என்ன
கேட்டது தானா கிடைச்சதம்மா

அன்பாக என்னக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
அள்ளித் தான் சேர்த்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும்
ஆசைய நான்தான் 
மறச்சி வைச்சேன்

பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா

பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா
பொன்னான ஒம்மனச
எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துக் கிட்டேன்

வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்
தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்
பூவுக்கு வேலியிட்டா
வாசம் எங்கு போகும்
பூ அள்ளி நீ கொடுத்தா
பொண்ணு ஒன்னச் சேரும்
கேட்டத எல்லாம் நான் தரவா

பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட
கடிதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சி உன் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா
என்னத் தாங்கிக் கொள்ளையா

பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்னத் தாங்கிக் கொள்ளம்மா