என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சுஎன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த க
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு 

கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே 
குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமே 
மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க 

எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு 
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும் 
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு 
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும் 
கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே 
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே 
பத்து விரல் போதாது உன் மோகமே 
லட்ச விரல் நீ கொண்டு வா வானமே 
என் முத்து மணி சுடர் முல்லை மலர் திடல் 
நாணுவதேன் 

முக்கனி அதில் முக்கியம் கொண்ட 
முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன் 
பத்தினி பெண்ணின் பத்தியம் தேட 
ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்
பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது 
என்றும் இனி நீங்காது நான் சேர்ந்தது 
தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது 
என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது 
ஒன் வெள்ளை மனசிலும் வெட்க சிரிப்பிலும் 
வாழ்ந்திருப்பேன்