மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன்,
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 

நான் எத்தனையும் பொத்தி வச்சேன், 
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு, 
அது அத்தனையும் மொத்தத்துல 
இரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சி, 
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 
இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 

நெஞ்சுக்குள்ள நேசம் எனும் 
நாத்து நட்டேன் நேத்து., 
நட்டதெல்லாம் நெல்மணியா நிற்குதடி பூத்து.., 
வச்சிப் பொண்ணு தாவணிய தூக்குதய்யா காத்து., 
ஒத்திபோக சொல்லுமுன்னே 
சொக்கிபோற பாத்து.., 

நான் என்ன செய்ய, 
வம்பு பண்ணுது என் மனது.., 
நாணம் இல்லாம சும்மா நிக்குமா பெண் மனது..?, 
வெட்கம் நீங்கிடுமா..?, 
இன்னும் நாடகமா..?, மானே., 

இளமானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், 
என் மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், 

பத்தமடா பாய்விரிச்சு நான் படுத்தா போச்சு, 
பத்தவச்ச சூடப் போல சூடாகுதே மூச்சு, 
வெண்ணிலவை தூதுவிட்டு 
சேதி சொல்லு நாளும், 
வேலையெல்லாம் விட்டுப்புட்டு ஓடி வரேன் நானும்.., 
நீ வரவேண்டி உயிர் நித்தமும் தத்தளிக்கும்., 
ஆயிரம் வாட்டி மனம் உன் பெயர் உச்சரிக்கும்.., 
இராப்பகலாக என்ன வேதனை பண்ணுறியே.., 
பூப்படஞ்சாலே தூக்கம் 
போயிடும் கண்மணியே, 
இன்னும் ஏங்கனுமா..?, 
மனம் தாங்கிடுமா..?, மாமா., 