வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்.
ஆழி நான் விழுந்தாள்
வானில் நீ எழுந்தாய்.
என்னை நட்சத்திர காட்டில்
அலையவிட்டாய்.
நான் என்ற எண்ணம்
தொலையவிட்டாய்
நல்லை அல்லை
நல்லை அல்லை
நன்னிலவே நீ
நல்லை அல்லை
நல்லை அல்லை
நல்லை அல்லை
நல்லிரவே நீ
நல்லை அல்லை
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே
நான் உன்னை தேடும் வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்
நல்லை அல்லை
நல்லை அல்லை
நன்னிலவே நீ
நல்லை அல்லை
நல்லை அல்லை
நல்லை அல்லை
நல்லிரவே நீ
நல்லை அல்லை
முகை முகல் முத்தென்ற நிலைகளிலே
முகம்தொட காத்திருந்தேன்
மலர் என்ற நிலை விட்டு
பூத்திருந்தாய் மனம் கொள்ள காத்திருந்தேன்.
மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டால்
நல்லை அல்லை
நல்லை அல்லை
நாறும்பூவே நீ
நல்லை அல்லை
நல்லை அல்லை
நல்லை அல்லை
முல்லை கொள்ளை
நீ நல்லை அல்லை