தென்றல் வந்து என்னைத் தொடும்ஆஹா சத்தமின்றி முத்தமிடும்பகலே போய் விடுஇரவே பாய் கொடுநிலவேபன்னீரைத் தூவி ஓய்வெடுதென்றல் வந்து என்னைத் தொடும்ஆஹா சத்தமின்ற
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரைத் தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு 
திரைகள் எதற்கு
நனைந்த பிறகு 
நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரைத் தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ
மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள்
எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரைத் தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்