வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம் கொண்டவன் நீயல்லவா


வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா
தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா
தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா
தூசிப் புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல
நூறு தடை வந்தும் நீ எப்பவும் தோற்றதில்ல
முல்லைப் பூவா நீ சிரிக்கணும்
எந்தன் சோகம் நான் மறக்கணும்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா
தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா


என்னையன்றி வேறுலகம் உனக்கு
இல்லை என வாழ்ந்தவன் நீ
எனக்கு ஜீவன் ஜீவன் நீயல்லவா
கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை போல்
கண்ணன் அன்று நீ இருந்தால்
எந்தன் மூச்சும் பேச்சும் நின்றிடுமே

நீ என்னோடு என்றென்றும் உடன் பிறக்க
தினம் நான் வேண்டும் தெய்வங்கள் வரம் தருமே
உங்கள் பந்தம் நான் பார்க்கையில்
எந்தன் கண்கள் நீர் வார்க்குது

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா

தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா


வேரு விட்ட ஆலமரம் நிழலில்
சேருகிற பாக்கியம் தான் கொடுத்தே
என்றும் என்றும் நான் மறவேன்

நந்தவனப் பூக்கள் என மலர்ந்து
நாம் சிரிக்கும் நேரம் வரும் விரைந்து
தென்றல் வந்து நாம் மிதப்போம்

உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தனை
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்

உள்ளம் துள்ளும் பூபாளத்தை
ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா

தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா

தூசிப் புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல

நூறு தடை வந்தும் நீ எப்பவும் தோற்றதில்ல

உந்தன் சோகம் நீ மறந்திட
முல்லைப் பூவா நான் சிரிக்கிறேன்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா
தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா