கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்
என்னை ஆசைப்பட்டு கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்பு தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்பு தான்
மண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான்
மதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சருவா கருப்பு தான்
பூமியில முதன் முதலா பொறந்த மனுஷன் கருப்பு தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான்
உன்னை என்னை ரசிக்க வைச்ச
உன்னை என்னை ரசிக்க வைச்ச......
கண்ணு முழி கருப்பு தான்
கற்பு சொல்லி வந்தாள் அந்த கண்ணகியும் கருப்பு தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த.....
கருவறையும் கருப்பு தான்
மனமும் கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை
மயக்கும் தவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
உன்னை கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான்
ரெட்டை ஜடை பின்னலலிலே கட்டும் ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்பு தான்
பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான்
முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்
உன்னை பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்பு தான்
ஊரரிய பெத்துக்கணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான்
அழகு கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை
மயக்கும் தவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்
என்னை ஆசைபட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்