என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

உச்சி வெய்யில் வேளை நீ நடக்க
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க
உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
முக்குளிக்க நானும் ஏங்கறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
கொஞ்சம் பொறு இரவாகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்
எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

பள்ளியறை பாட்டை நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க
தட்டுறப்ப தாளம் திறந்திருக்க
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க
கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா
காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும்வரை விசிறி வீசவா
அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்
என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்

உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிராரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்