நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே
கவேரிய கானல் நீரா பெண்மை எது உண்மை
முள் வெளிய முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை
தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை
பூஞ்சோலையில் வாடை காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென்று தூறல் போடும் எதோ மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் எது கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே