காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம்
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்

உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்

பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
அன்பே அன்பே

நீ சொல்லிய மெல்லிய சொல்லிய
என் தலை சொர்க்கதை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியில்
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்

சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்

உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ

காத்திருந்தாய் அன்பே ....