ராசாவே… உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்

ராசாவே… உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
ஓயாமலே மழைத் தூரலாம்
போதாய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை

ராசாவே… உன்னை விட மாட்டேன்

கோரைப் புல்லை கிள்ளி
உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னை பற்றிக்கொள்ள எண்ணம் எண்ணி வைத்தேன்
கோழி எனக்கேதய்யா
ஒரு தூது தான் போக….
தேதி என்ன சொல்லய்யா
மஞ்சள் தாலி தான் போட
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள்….ஓஹோ ஹோ

ராசாவே… உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்

ஆஹா அஹாஹா ஆஹா ஹா…

கிக்கி கிக்கி என்று
வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்
கூக்கூ கூக்கு என்று
கானக்கருங்குயில் சித்தம் தன்னை கொல்லும்
ஆளம் விழுதாகவே
மனம் வாடிடும் போது
நானும் அது போலவே
அலைந்தாடிடும் மாது
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள்….ஓஹோ ஹோ

ராசாவே… உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
ஓயாமலே மழைத் தூரலாம்
போதாய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை

ராசாவே… உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்