மல்லியே சின்ன முல்லையேஎந்தன் மரிக்கொழுந்தேஅல்லியே இன்ப வள்ளியேஎந்தன் அருமருந்தேவண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஹோ...மல்லியே சின்ன முல்
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே
எந்தன் அருமருந்தே

வண்டாடும் 
மலர்ச் செண்டாடும் 
குழலாடும் ஹோ...

மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே
உந்தன் அருமருந்தே

மாலைக்கும் தாலிக்கும் 
வந்தது யோகம்..ஆஹா..
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்..ம்ம்..

சேலைக்குள் சோலை பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்

ஆனந்த வேகத்தில் 
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே

பூவென்ற தேகத்தில் 
நாம் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே

நீராடும் உடல் போராடும்
உனை தேடும்..ஹோ...

மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே
உந்தன் அருமருந்தே

சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்..ஆஹா..
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்..ம்ம்..

வாரிக் கொண்டாடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன் ஓடை
கோதைப் பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை

நீ தொட்ட பாகங்கள் 
தேன் மொட்டு கோலங்கள்
தேடியதால் கனியானேன்

வாய் விட்டு நாளொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேன் அடி மானே

அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம்..ஹோ..

மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே
உந்தன் அருமருந்தே

வண்டாடும் 
மலர்ச் செண்டாடும் 
குழலாடும்..ஹோ...

மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே
உந்தன் அருமருந்தே